உள்நாடு | அரசியல் | 2022-01-24 16:37:18

இலங்கையின் முதலாவது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல்.

நூருல் ஹுதா உமர்

இலங்கையின் முதலாவது இளைஞர் பாராளுமன்றத்தின் 10 வது வருடத்தை முன்னிட்டு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்று கூடல் சிகிரியா மலை குன்றில் அண்மையில் இடம்பெற்றது.  200க்கும் மேற்பட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.

இவ் ஒன்றுகூடலின் போது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து பரிமாற்றங்கள் இடம் பெற்றதுடன் இவ் ஒன்று கூடல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒன்று கூடல் பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இவ் ஒன்று கூடல் அரசியல் இன மத வேறுபாட்டுக்கு அப்பால் உறுப்பினர்களுக்கிடையே நட்பு ரீதியானதாக இருக்க வேண்டும் இதனை எதிர்காலத்தில் மேலும் எவ்வாறு கொண்டு செல்லாம் எனவும் ஆலோசனைகள் செய்யப்பட்டதுடன் சிகிரியா மலை குன்று மற்றும் அதன் அண்டிய பிரதேசத்திலும் சிரமதான பணிகளில் இவ் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.