உள்நாடு | விளையாட்டு | 2022-01-19 06:52:12

மருதமுனை பிரைட் பியூச ​​வி.​க ​தொடரை கைப்பற்றியது 

(றாசிக் நபாயிஸ்)​

​​மருதமுனை பிரைட் பியூச ​​விளையாட்டு​​க்​ ​கழகத்தினருக்கும்​ ​புத்தளம் கம்மந்தொழுவ சுபர் இலெவண் விளையாட்டு கழகத்தினருக்கும் இடையே புத்தளம் கல்லடிய ஹொல்சிம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இரண்டு இருபதுக்கு இருபது கடின பந்து​ ​இரு போட்டிகளிலும் மருதமுனை
பிரைட் பியூச விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று 2-0 எனும் ரீதியில் தொடரை கைப்பற்றியது.

முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பிரைட் பியூச விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்து​ ​கம்மந்தொழுவ சுபர் இலெவண் அணியினரை 95 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய​ ​பிரைட் பியூச விளையாட்டுக் கழக
அணியினர் 18வது ஓவரில் 5 விக்கட் இழந்து 96 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இரண்டாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற​ ​கம்மந்தொழுவ சுபர் இலெவண் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய​ ​பிரைட் பியூச விளையாட்டுக் கழகம் 15வது ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts