உள்நாடு | குற்றம் | 2022-01-18 11:26:17

அட்டாளைச்சேனையில் பெற்ரோல் குண்டு தாக்குதல் : மயிரிழையில் உயிர் தப்பிய நபர்.

நூருல் ஹுதா உமர் 

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது  இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை 17 ம் திகதி அன்று அதிகாலை 02 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கல் வீசி உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால் அவ்விடத்தில் தங்கியிருந்த அவரின் சகோதரர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். வீட்டின் உரிமையாளரான மபாயிஸ் உடனான தனிப்பட்ட தகராறுகளே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts