உள்நாடு | அரசியல் | 2022-01-16 16:23:35

அமான் அஸ்ரஃப்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் !

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி. மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரஃப் அவர்களின் புதல்வன் அஸ்ரஃப் அசோசியேட்ஸ் நிறுவனத்தலைவர் அமான் அஸ்ரஃப்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை(15) மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் முக்கிய விடயமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்து,  அண்மையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் அரசியல் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற,  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தின்  பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம்.பாஸில் எழுதிய "போர்க்கு பிந்திய அரசும் சமூகமும்" மற்றும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் இணைந்து  கலை கலாச்சார பீடத்தின்  பீடாதிபதியாக பேராசிரியர் எம். எம். பாஸில் எழுதிய "கலாநிதி. எம்.எச்.எம். அஸ்ரஃப் நினைவுப் பகிர்வு" எனும் நூல்ளை பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் அவர்களினால் அமான் அஸ்ரஃப் அவர்களுக்கு  அன்பளிப்பு செய்யப்பட்டது.

பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் எழுதிய "போர்க்கு பிந்திய அரசும் சமூகமும்" எனும் நூல் "இலங்கையின் மூன்று தசாப்தங்களாக யுத்தம் இந்நாட்டின் அபிவிருத்தியை பெரிதும் பாதித்துள்ளது. 2009 க்குப் பின்னர் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும், போர்க்கு பிந்திய அரசும் சமூகமும் சமகால போக்கு மிக அழகான முறையில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு தனது எழுத்தாக்கத்தை இன்நூல் மூலமாக வெளிக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் அமான் அஷ்ரஃப் அவர்கள் பல்கலைக்கழகத்தின் அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகத்திற்கு விஜயம் செய்து அங்கு அமையப்பெற்றுள்ள முன்னாள் நூலகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் சேகரிப்பு பகுதியினையும்,  காப்பக சேகரிப்பு பகுதியையும் மற்றும் நூதனசாலையினையும் பார்வையிட்டார். அதன் பின்னர்  நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் அவர்களினால் இலங்கை முஸ்லிம்களை ஆராய்தல் எனும் புத்தகமும் அமான் அஸ்ரஃப் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts