ஆரோக்கியம் | மருத்துவம் | 2022-01-16 13:49:12

கல்முனை பிராந்தியத்தில்  இரண்டு வாரங்களில் 81 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 81 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

புது வருடம் மற்றும் தைப்பொங்கல் திருவிழாக்களின் பின்னரான கொரோனா தொற்று நோய் தொடர்பான முன்னேற்ற அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் பிரகாரம்,

இதுவரை எதுவித தடுப்பூசிகளையும் போடப்படாத - 18 நபர்களுக்கும்,  இரண்டு டோஸ்கள் தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்ட- 52 நபர்களுக்கும், 1 வது டோஸ் மட்டும் ஏற்றிக்கொண்ட- 9 பேருக்கும், 3 டோஸ்கள் தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்ட- 2 நபர்களுக்கும் என 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 22, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய பிரிவில் -10, காரைதீவு -10, சாய்ந்தமருது - 7, அக்கரைப்பற்று - 7, அட்டாளைச்சேனை -6, சம்மாந்துறை - 6, நிந்தவூர் -5, இறக்காமம் - 4, பொத்துவில் - 2, நாவிதன்வெளி -2 பேரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெற்றுக்குள்ளானவர்களுக்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

16 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இது கொரோனா தொற்று நோய் மேலும் பரவுவதை தடுக்கும் என்றும் வைத்திய அதிகாரியினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts