உள்நாடு | இலக்கியம் | 2022-01-14 21:14:17

அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸ் அவர்களின் நூற்றாண்டு விழா.வும் நினைவுக் கருத்தரங்கும்

Sijas abm


இஸ்லாமிய இலக்கிய பாரம்பரியத்தை தமிழ் இலக்கிய பண்பாட்டு டன் ஒன்றினைத்த அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸ் அவரின் நூற்றாண்டு விழாவும், நினைவு கருத்தரங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில்,  2022.01.18. திகதி நடைபெற உள்ளது. இது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் (Dr.) அபூபக்கர் றமீஸ் அவர்களின் தலைமையில்
"நூற்றாண்டு விழா" நடைபெற உள்ளது. பிரதம அதிதியாக Chief Guest : Hon.Mahinda Rajapaksa Prime minister அவர்களும் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

ஆய்வு கருத்தரங்கில்; தலைமை: பேராசிரியர் எஸ்.தில்லைநாதன்(வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களும், அறிமுக உரை: பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ( மொழித்துறை தென் கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்களும் கருத்துரைகளை பல  பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நிகழ்த்த உள்ளனர் இந்நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகளை தென் கிழக்குப் பல்கலைக்கழக  பதிவாளர் Mr.H. அப்துல் சத்தார், மொழித்துறை, மற்றும் அல்லாமா உவைஸ் குடும்பத்தினர் ஏற்பாடுகளை ஒழுங்கு படுத்தியுள்ளனர். சுகாதார வழிமுறைகளை (COVID-19) பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையினர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் யாவும் பி.ப 02.30 மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டு மொழித்துறைத் தலைவர் கலாநிதி Dr. M.A.S.F.ஸாதியா அவர்களின் நன்றியுடன்(Vote of Thanks 5.20 - 5.25 மாலை) நிறைவடைய உள்ளன.

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் இந் நூற்றாண்டிலும் எப்போதும் இலக்கிய வரலாறு எழுதப்படும் போது காரணமாக இருந்து பின் சந்ததியினருக்கு பாதுகாத்து, தமிழிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்களை மீழ கண்டுபிடிப்பு செய்து, தமிழ் இலக்கிய பண்பாட்டின் ஒன்றிணைந்த ஒரு கூறாக ஆக்கிய.. அறிஞர் திலகம், பேராசிரியர், கலாநிதி, கலாசூரி, கலைமாணி, தீன் தமிழ் காவலர், அல்லாமா, அல்- ஹாஜ் மஹ்மூத் மரிக்கார் முஹம்மது உவைஸ் அவர்கள். 
1922.01.15 பாணந்துறையில் பிறந்து எளிமையான வாழ்க்கை 1927.05.22 ஆரம்ப கல்வியினை அரசினர் தமிழ் பாடசாலையில் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் இலங்கை, இந்தியா என அவர் கல்வி மிகுந்த கஷ்டத்தில் உயர்ந்தது இலக்கியத்துக்கு இமயத் தொண்டு செய்தவர்.

இவரின் "நூற்தொகுதி"
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமையப்பெற்ற Ex- Libris Collection பகுதியில் பாதுகாத்து, பயன்படுத்தப்படுகிறது .

இதுவரை பேசப்படாத துறைகளையும், இஸ்லாமிய உலகுக்கு அறிமுகம் பெற்றிராத நூல்களையும், இஸ்லாமிய இலக்கியங்களில் தனித்துவமான பண்பினை முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு இலக்கியப் பாரம்பரியத்தை காத்து தக்க வைத்துள்ள மகான்களை ஞாபகமூட்டிப் பார்க்க வேண்டும்.

- றசாக் முஹம்மட் அலி -
            2022.01.11
     நூலக ஊடகப்பிரிவு


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts