உள்நாடு | கல்வி | 2022-01-13 17:43:28

இசங்கணிச்சீமை தாறுல் பிஹாம் பாடசாலையின் வித்யாரம்ப விழா  

நூருல் ஹுதா உமர்

அக்கறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் நீண்டகாலமாக இயங்காமல் காணப்பட்ட பாலர் பாடசாலையை 2021 ஆம் ஆண்டு உயிரோட்டமான ஒரு பாடசாலையாக அக்கரைப்பற்று  பிரதேச சபை  உறுப்பினர் ரீ எம் ஐய்யூபின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டு சிறப்பான அடைவுகளை அடைந்து புதன்கிழமை  2022 ஆம் ஆண்டில் வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இசங்கணிச்சீமை அல்- கமர் வித்தியாலயத்தின் அதிபர் எச்.தாலிபின் தலைமையில் பாலர் பாடசாலை நிறைவேற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இப்பாலர்  பாடசாலையை உருவாக்கியவருமான ரீ. எம் ஐய்யூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மற்றும் சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று அல்-முனவ்வரா கனிஷ்ட  பாடசாலையின் அதிபரும் பிரதி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம் ஐ எம் உவைஸ் மற்றும் அஸ்- சிபாயா பாடசாலையின் அதிபர் முஹம்மட் சமீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts