உள்நாடு | மருத்துவம் | 2022-01-12 16:21:40

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் "கிளினிக் பதிவேடு" வெளியீடு

(சியாத்.எம்.இஸ்மாயில் ,பட உதவி. எஸ். மாதவன்)  

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  பொது மருத்துவ நோயாளிகளுக்கான "கிளினிக் பதிவேடு" நவீன முறையில் பல உள்ளடக்கங்களுடன் அச்சடிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வைத்தியசாலையில்  வெளியீட்டு வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம். ஹனிபா தலைமையில் நலன்புரிசங்கத்தின் தலைவர் டாக்டர். ஏ. சீ. அப்துல் றசாக் ஒருங்கிணைப்பில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில், பொது வைத்திய நிபுணர் டாக்டர்.எம்.டி.சமரநாயக்க, திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆகில் ஷரீப்தீன், 

அரச மருத்துவ அதிகாரி சங்க தலைவர் டாக்டர். ஸியாத்.எம்.இஸ்மாயில், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டொக்டர்.எம்.எச்.எம். சனூபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ் மற்றும் வைத்தியர்களான எம்.ஐ.ஏ. நசீர், எம்.ஐ. சமுன், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர்,நிருவாக உத்தியோகத்தர்  எஸ்.எல். சாதிக் ஏனைய வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்று முதல் இப்பதிவேடு,  பொதுமக்களின் பாவனைக்காக வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தினூடாக விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts