உள்நாடு | சமூக வாழ்வு | 2022-01-10 15:55:20

சிறுவர் சமுதாயத்திற்கான உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம்.

(றாசிக் நபாயிஸ்)

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக சிறுவர் சமுதாயத்திற்கான உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி திட்டம் ஒவ்வொரு  பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஊடாக விண்ணப்பப் படிவங்கள்  வினியோகிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளின் போசாக்கு மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இரட்டை குழந்தைகளுக்கான உதவித் தொகையும் அது போன்று நீண்ட காலம் சிகிச்சை பெறவேண்டிய நோய்களுக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

போசாக்கு குறைபாடு கொண்ட 0 தொடக்கம் 3 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு போசாக்கு உதவித்தொகை,குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் பிள்ளைகளுக்கு மாதாந்தம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டமான 'கெப்ப கரு' (பெற்றோர் பாதுகாவலர்) உதவித்தொகையாக ஐநூறு ரூபாயும் வழங்கப்படுகிறது.

பாடசாலைக்குச் செல்லாத அல்லது விட்டு விட்டு பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய்யும், செவன சரண கெப்பகரு திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியில் உள்ள தரம் 1 தொடக்கம் 10 வரை கல்வி பயிலும் பிள்ளைகள் பெற்றோர் பாதுகாவலர் திட்டத்திற்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பொருளாதார காரணங்களினால் அல்லது வேறு காரணங்களினால் அச்சுறுத்தல் உள்ள பிள்ளைகளுக்கு நென திரிய புலமை பரிசில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்புக்காக அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பிள்ளைகளுக்கான சிறுவர் பாதுகாப்பு திட்டத்துக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று உதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts