![]() |
(சியாத்.எம்.இஸ்மாயில் )
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கில், அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாயலினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் பள்ளிவாயலில் சனிக்கிழமை (08) நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம்.ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தக்வா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.எம்.றியாட் அவர்களின் ஒருங்கிணைப்பில் கொவிட் கால நிலைமை மற்றும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டுமேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம் முகாமில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எப்.எம்.ஏ. காதர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், இதில் ஆண்கள், பெண்கள் என இரத்த கொடையாளர்கள் 231 பேர் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியதுடன் 202 இரத்த சேகரிப்புக்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.