உள்நாடு | அரசியல் | 2022-01-04 16:13:10

மக்களை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்ய வேண்டும். NFGG பொதுச் செயலாளர்- ஏ.எல்.எம்.ஸபீல் (நளீமி)

(றாசிக் நபாயிஸ்,நூருல் ஹுதா உமர்,ஏ.எல்.எம். ஷினாஸ்) 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுமார் 18 உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. தேர்தல் காலங்களில் நாங்கள் அடிக்கடி சொல்வது போன்று எமது மிகப்பெரிய வேலைத்திட்டம் மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி மக்கள் தெளிவான ஒரு சிந்தனையில்  இருக்கும் போது அல்லது ஒன்றைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் போதுதான் அவர்கள் ஏதோ ஒரு கொள்கைக்காக வேண்டி அவர்களால் வாக்களிக்க முடியும் என்ற அடிப்படையில் தேர்தல் காலங்களில் பல விடயங்களை பேசினோம் என்றார்.

மருதமுனை கடற்கரை விடுதியொன்றில் கல்முனை பிராந்திய பொறுப்பாளரும் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான மௌலவி ஏ.ஜீ.எம். நதீர் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்ற சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இங்கு கருத்து வெளியிட்ட அவர், 

முஸ்லிம் சமூகத்தில் அரசியல் சம்பந்தமாக பேசினோம், இந்த நாட்டில் இடம்பெற இருக்கின்ற நிகழ்வுகள் சம்பந்தமாக பேசினோம் இப்போது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சூழல்கள் பற்றி தேர்தல் காலங்களில் நாங்கள் சொன்னோம்.

நாங்கள் பிரதானமான ஒரு இலக்காக வைத்து இருப்பது மக்களை ஒரு அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்வதுடன் அவர்களுக்கு அரசியல் ரீதியான ஒரு விழிப்புணர்வு ஏற்படுவதன் ஊடாக இந்த முஸ்லிம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டை செய்வதற்காகத்தான் எங்களுடைய வேலைத்திட்டங்கள் மக்களை அறிவு ரீதியாக சிந்திக்க வைக்கின்ற வேலை திட்டங்களாக அமைந்திருக்கின்றது.

நாங்கள் எங்களுக்கு கிடைத்த பதவிகளை மிக அமானிதமாக இந்த சமூகத்தினுடைய ஒவ்வொரு பிரதேசத்திற்கும் காவல் நாய்களாக இருந்து எங்களுடைய விடயங்களை செய்து வருகின்றோம்.

உள்ளூராட்சி சபை மக்களோடு நேரடியாக தொடர்புபட்ட ஒரு நிறுவனம். மக்களுக்கு எது எல்லாம் தீமை பயக்கக்கூடிய செயற்பாடுகளாக அமைகிறதே அல்லது மக்களின் நலன்களை சுரண்டுகின்றன, மக்களினுடைய நலங்களுக்து  மோசடியாக இடம்பெறுகின்ற செயற்பாடுகளுக்கு மிகக் காத்திரமாக உரிய இடத்தில் பேசக்கூடிய சகோதரர்களை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் என்று கூறினார்.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் எம்.எம்.அப்துர் றகுமான், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மஸீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றஜப்தீன், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம். ஸியாத், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜஹான், உட்பட ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts