பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-12-28 12:22:50

கதீஜா கிண்டகார்டன் முன் பள்ளியின் வருடாந்த கலை விழா

(பாறுக் ஷிஹான்)

கதீஜா கிண்டகார்டன் முன் பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு விழாவும்  பிரபல அறிவிப்பாளரும் முன்பள்ளி நிறுவுனருமான   அஹமட்லெப்பை அன்ஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கும் விஷேட விருந்தினராக மல்ஹறுஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ  மதனி , சமூக சேவகர் எம்.ஐ.எம்.  ஜிப்ரி (LLB) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையில்  நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசில்களை பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வழங்கினர். 

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts