உள்நாடு | சமூக வாழ்வு | 2021-12-27 06:03:55

வெடிக்கக்கூடிய நான்கு லட்ச சமையல் எரிவாயு கொள்கலன்கள் வீடுகளில் இருப்பதாக எச்சரிக்கை

மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.  இந்த பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்களை திரும்ப பெற வேண்டும். எனினும் எரிவாயு நிறுவனங்கள் இதுவரையில் அதற்கான நடவடிக்ககைளை எடுக்கவில்லை எனவும் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.  எரிவாயு விபத்துக்கள் தொடர்பான ஆராயவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு வழங்கிய அறிக்கையை ஜனாதிபதி செயலணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்ற போதிலும் இதுவரை அவர்கள் அதனை ஆய்வு செய்யவில்லை.எரிவாயுவின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்தாலும் மர்கெப்டன் அளவினை சரியாக பேணி இருந்தால், நடந்த விபத்துக்களில் 50 வீதமான விபத்துக்களை தவிர்த்திருக்க முடியும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts