பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-12-22 12:46:59

"கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்“ எனும் தொனிப்பொருளிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்.

(றாஸிக் நபாயிஸ்)

நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்க அலுவலகத்தினூடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் “கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்“ எனும் தொனிப்பொருளிலான தேசிய மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் செயலமர்வு நிகழ்வு இன்று (21) கல்முனைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல். பாத்திமா சிபாயா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

இந்நிகழ்வானது முதல் கட்டமாக பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாதர் சங்க அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளர்களாக காரைதீவுப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா பிரதீபன் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஆர்.தஹ்லான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இதன் போது கலந்து கொண்டனர். மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிபாயா அவர்கள் உரையாற்றும் போது நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்க அலுவலகம் பற்றியும் இனங்களுக்குடையிலான நல்லிணக்கம் சார்ந்த கருத்துக்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான் அவர்கள் உரையாற்றும் போது நல்லிணக்கம் என்பது இன்றைய காலத்தில் அவசியம் பலதரப்பட்ட குழுக்களுக்குமிடையில் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் கடந்தகால சில கசப்பான சம்பவங்களும் அனுபவங்களும் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க முறிவை ஏற்படுத்தியுள்ளன என்றும் கூறியிருந்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts