உள்நாடு | சமூக வாழ்வு | 2021-12-12 14:08:40

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு.

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சமூகசேவையார்கள், 

சமய தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு, உளவளத்துணை ஆலோசனை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான  வழிகாட்டல்கள் அடங்கிய விழிப்புணர்வு செயலமர்வு இன்று (12) முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணையில் நிறுவனத்தின்  கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மனநல

வைத்தியர் யூ.எல்.சராப்டீன் அவர்களும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் 

இணைப்பாளர் யூ.எல்.கபீலா, 

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தகர் ஆர்.அனுஸ்ஹா ஆகியோரும்

கலந்து சிறப்பித்தனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts