வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-11-27 05:44:38

ரஷ்யாவில் மிக மோசமான சுரங்க விபத்து!

தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்து ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளதுடன் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சேர்பியாவின் கெமரவோ பிராந்தியத்தில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் மீட்பு குழுவினராவார்.லிஸ்ட்பவியன்ஸயா சுரங்கத்தில் நிலக்கரித்தில் உள்ள நிலக்கரி துகள்கள் தீப்பிடித்துள்ளது.

வியாழக்கிழமை குறித்த சுரங்கத்தினுள் 287 பேர் இருந்துள்ளனர்.இவர்களில் 49 பேரை வெளியேற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுரங்கத்தினுள் புகை காரணமாக பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மீத்தேன் வாயு அதிகமாக உள்ளதால் மீட்பு பணிகளையும் முழுமையாக முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.

மீத்தேன் மற்றும் நச்சு வாயுக்கள் சுரங்கத்தினுள் நிறைந்தமையே மரணங்கள் அதிகரிக்க காரணமாக என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts