உள்நாடு | பொருளாதாரம் | 2021-11-27 05:33:33

‘வளர்ந்த நாடுகளிலும் எரிவாயு விபத்துகள் நடக்கின்றன – வளரும் நாடாக நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ – லசந்த அழகியவன்ன

எரிவாயு பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிவாயுவின் தரத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒழுங்குமுறைகளை வெளியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூட்டுறவு சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சில்  (25) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அண்மைக்காலமாக இடம்பெற்ற எரிவாயு விபத்துக்களுக்கு தரமற்ற உபகரணங்களின் பாவனை மற்றும் அலட்சியமே பிரதான காரணங்களாகும் என்று குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Happy Crismistmas

Popular Posts