வெளிநாடு | குற்றம் | 2021-11-26 06:42:40

லண்டனில் கத்திக்குத்து!! சிறுவனுக்கு நேர்ந்த அவலம்

பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் Southall குடியிருப்பு தெருவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சிறுவனொருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணையில் - உயிரிழந்தவரின் பெயர் Ashmeet Singh எனவும், அவருக்கு 16 வயது எனவும், தெரியவந்துள்ளதுடன் சிறுவனின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts