உள்நாடு | சமூக வாழ்வு | 2021-11-24 18:56:29

ஒரு லட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதி அபிவிருத்திக்கு மருதமுனையில் பல வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு

 (றாசிக் நபாயிஸ்)

கல்முனை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைன் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதி அபிவிருத்தி 

கருத்திட்டத்திற்கு அமைவாக கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்களிடத்தில் அமைப்பாளர் வேண்டி கொண்டதற்கிணங்க பிரதமரின் விஷேட சிபாரிசின் பேரில் பிரதம அமைச்சினால் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இரஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட்ட உத்தரவின்  பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பணிமனையின் அனுமதியுடன் மருதமுனை கிராமத்திற்கான பல வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என கல்முனை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைன் தெரிவித்தார்.

எனவே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் வீதிகளான கிராமோதய வீதி, கிராமோதய முதலாம் குறுக்கு வீதி, இரண்டாம், மூன்றாம், நான்காம் குறுக்கு வீதிகள், விஷ்ணு கோயில் வீதி, விஷ்ணு கோயில் குறுக்கு வீதி, தும்பு தொழிற்சாலை வீதி,  தும்பு தொழிற்சாலை வீதியில் ஆறு குறுக்கு வீதிகள், மக்கள் வங்கிக்கு அருமையில் உள்ள வீதி, மக்கள் வங்கிக்கு அருமையில் உள்ள இரண்டு வீதிகள் மற்றும் பிரதான வீதியில் அமைந்துள்ள அஹமட் லெப்பை லேன்ட் என 18 வீதிகளை கல்முனை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைன் அவர்கள் ஆரம்பித்து வைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மருதமுனை மத்திய குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts