உள்நாடு | கல்வி | 2021-11-23 16:23:09

சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பாலர் பாடசலைகளுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு !

சம்மாந்துறை நிருபர் -ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக உதவி தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 85 பாலர் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 9 பாலர் பாடசாலைகளுக்கு இவ் உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது. 

அந்த நிலையங்களிடையே அரச /தனியார் அல்லது சமய நிறுவனங்கள் நடாத்தி வருகின்ற பாலர் பாடசாலைகளின்  திருத்த வேலைகளுக்கு  ஆகக்கூடிய தொகையாக 600000 ரூபாவும்  வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் நடாத்தி செல்கின்ற நிலையங்களுக்கு  200000 ரூபாவும் பாலர் பாடசாலைகளுக்கமைவாக வழங்கப்பட்டதுடன்இந்த தொகைக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட (9)  நிலையங்களுக்கும் 120000 பெறுமதியான மரத்தளபாடங்கள் அடங்கிய தொகுதியொன்று ரூ 50000/=  பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் அடங்கிய பொதியொன்றும் மேலும் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யு.எல் அஸ்லம், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.வை சித்தி நபிசா, முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தகர் ஏ.ஜே.சித்தி றியான,பாலர் பாடசாலைகளின் பொறுப்பதிகரிகள் என குறிப்பிட்ட அளவனோர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts