உள்நாடு | விளையாட்டு | 2021-11-21 11:26:17

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழக முத்து விழா நிகழ்வுகளும், பாராட்டு வைபகமும்.

(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முத்து விழா நிகழ்வுகளும், வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாளிகைக்காடு வபா ரோயல் மண்டபத்தில் கழகத்தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியும், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பேராசிரியர் ஏ. றஸ்மி, விசேட அதிதிகளாக சட்டத்தரணி என்.எம்.ஏ.முஜீப், அல்- அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல்.அப்துல் பரீட், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம். உதுமாலெப்பை, கழக தவிசாளரும், தொழிலதிபருமான ஜே.எம்.காலித் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

30 வருடங்களாக இந்த கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள், இந்த கழகத்தின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு விளையாட்டில் சாதித்த வீரர்கள், சமூக சேவையில் ஈடுபட்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் அதிதிகளினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக நிரூபித்த வீரர்களுக்கும் வெற்றி கேடயங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts