உள்நாடு | மருத்துவம் | 2021-10-17 11:19:11

கல்முனை  பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த  விழிப்புணர்வு நடவடிக்கை 

(எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவிக்குட்பட்ட கல்முனை  பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும்முகமாக கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி   பிரிவினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் (16) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் ,கல்முனை தெற்கு சுகாதார பிரிவின்  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஏ. எம். பாறுக் அவர்களின்நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர திண்ம கழிவகற்றல் பிரிவு மற்றும் , கல்முனை ப்ரிலியண்ட்விளையாட்டுகழகத்தினரின் ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம். நியாஸ் , எம்.ஜீனைடீன் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் , பல நோக்கு செயலணியினர் ஆகியோர்  இணைந்து கல்முனை  மதரஸா வீதி  தொடக்கம் காசிம் வீதி வரையுள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கல்முனை  பிரதேசத்தின் குறித்த பகுதிகளில் சுற்றுச் சூழலில் வீசப்பட்டு, காணப்படுகின்ற ,  டயர்கள் , டின்கள் பொலித் தீன் பைகள், யோகட் கப் மற்றும் சிரட்டைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்ட கொள்கலன்கள்மற்றும் கழிவுகள் யாவும்  கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களில் சேகரித்துஅகற்றல்  நவடிக்கை இடம்பெற்றதுடன், பராமரிப்பின்றிக் கிடக்கும் வெற்றுக்காணிகள், கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளிட்ட டெங்குநுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு   கடுமையானஎச்சரிக்கை  விடுக்கப்பட்டதுடன்  ,விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்  சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

பொது மக்கள் சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில்  தொடர்ச்சியாக  டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு நுளம்புஒழிப்பு நடவடிக்கைகள்  இடம்பெறவுள்ளது.இதற்கு பொது மக்கள்  தங்களின் ஒத்துழைப்பை பூரணமாகவழங்குவது அவசியமாகும் அத்துடன் நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்படும் பட்சத்தில்  மீறினால் 

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர். எம். அஸ்மி இதன் போது தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts