உள்நாடு | சமூக வாழ்வு | 2021-10-14 17:36:41

வாழ்வை மாற்றுவோம் தேசிய  அமைப்பினால் சிறுவர் தின நிகழ்வும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும்  

 ஏ. எல்.எம்.ஷினாஸ், ஹூதா உமர்

'வாழ்வை மாற்றுவோம்' கலை கலாசார சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் அனுசரணையில்ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டலும் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்காக உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று (14.10.2021) அமைப்பின் இலங்கை பொறுப்பாளர்  கலைஞர் ஏ.எல்.அன்சார் தலைமையில் கதீஜா கிண்ட கார்டன் அதிபர் ஸப்னா அமீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது வொலிவேரியன் கதிஜா கிண்ட கார்டனில் நடைபெற்றது.

இதில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், கிராம சேவை அதிகாரி ஏ.எம்.அஜ்ஹர்
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாஜீத் , கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் வாழ்வை மாற்றுவோம் அமைப்பின் உறுப்பினர் லிம்ஷாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts