உள்நாடு | கல்வி | 2021-10-14 17:31:45

​​ஆசிய சாதனை புத்தகத்தில் கிராண்ட் மாஸ்டர்(Grand Master) பட்டத்தை பெற்று மருதமுனை சிறுமியை வரலாற்றுச் சாதனை

 ஏ. எல்.எம்.ஷினாஸ்

மருதமுனையைச் சேர்ந்த ​​எஸ். எம். ஆயிஷா இனாரா  (4 வயது சிறுமி) Asia Book of Records இல் சாதனையாளராக தெரிவுசெய்யப்பட்டு கிரேன் மாஸ்டர்(Grand Master) பட்டத்தை பெற்று மருதமுனைக்கும் முழு இலங்கைக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

​​2017 மே மாதம் நான்காம் தேதி பிறந்த ஆயிஷா இனாரா தனது பிஞ்சு வயதில் ஆசிய கண்டத்திலுள்ள நாற்பத்தி எட்டு (48) நாடுகளின் முழு பெயரினையும் மிக வேகமாக இருபத்திமூன்று செக்கன்களில் கூறி இந்த சாதனையை நிகழ்த்தி 'கிரேன் மாஸ்டர்' எனும் பட்டத்தை பெற்று முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பல திறமைகளை தன்னகத்தே கொண்ட இந்த சிறுமி மூதூர் அரபுக்கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும் மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி எஸ்.முஹம்மது புர்கான் (நத்வி) ஆசிரியரினதும் மருதமுனையைச் சேர்ந்த விசேட கல்வி ஆசிரியையான ஏ.ஆர். பாத்திமா நதா ஆகியோரது சிரேஷ்ட புதல்வியாவார்.

இந்த சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேசத்தின் கல்வியலாளர்கள் பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். இவருக்கான சான்றிதழ் மற்றும் பரிசு என்பன குறித்த நிறுவத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts