உள்நாடு | சமூக வாழ்வு | 2021-10-09 16:42:33

உலக புகழ்பெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலை கௌரவ பிரதமருக்கு வழங்கிவைப்பு

பிரதமர் ஊடக பிரிவு

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது.

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் 7, 8ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகும். அவலோகிஸ்வரர் போதிசத்துவரின் கருணை, தயவு ஆகிய குணங்களை சித்தரிக்கும் வகையில் இச்சிலையின் தோற்றம் அமைந்துள்ளது.

இடது காலை கீழே வைத்து இடது கையை தரையில் வைத்துக் கொண்டு வலது கையில் விதர்க்க முத்திரையை கொண்டதாக இச்சிலை விளங்குகிறது. இச்சிலையில் காணப்படும் கலை அம்சங்கள் காரணமாக அது உலகப் புகழ் பெற்று விளங்குவதாக பேராசிரியர் கபில ரணசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனரான கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட சுவரோவியம், வாஸ்து, சிற்ப தொல்பொருளின் நூற்றாண்டை முன்னிட்டு மத்திய கலாசார நிதியத்தினால் அச்சிடப்பட்ட 100 புத்தகங்களை கொண்ட நூல் தொகுதியில் சிவ மூர்த்தி நூலும் உள்ளடங்குகிறது.

மத்திய கலாசார நிதியத்தின் ஊடக பணிப்பாளர் லலித் உதேஷ் மதுபானு அவர்களினால் சிவ மூர்த்தி நூல் இதன்போது கௌரவ பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, மத்திய கலாசார நிதியத்தினால் இந்நாட்டின் வாசகர்களுக்காக விசேட தள்ளுபடியுடன் கூடிய சலுகை விலையில் இணையவழி ஊடாக புத்தகங்கள் மற்றும் மாதிரிகளின் விற்பனை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts