உள்நாடு | குற்றம் | 2021-10-09 16:10:11

கேரளா கஞ்சா விற்பனைசெய்து வந்த நான்கு பிள்ளைகளின் தாய் விசேட அதிரடிப்படையினரால் கைது

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 1100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர்  (05) கைது செய்யப்பட்டார்.

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. ரத்நாயக்க தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சார்ஜென்ட் குணபால மற்றும் சுபசிங்க, அபேரத்ன, நிம்ஸ் ஆகிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதன்போது நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட கிராமப் பகுதிக்கு கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நான்கு பிள்ளைகளின் தாய் (36வயது) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லாவெளி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட  சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்  உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts