உள்நாடு | கல்வி | 2021-10-09 16:04:51

31 வருட கால ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வசந்தி 

-பேரின்பராஜா-

கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய செல்வி.க வசந்தி இன்று(09.10.2021) தனது அறுபதாவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

20.03.1990 ஆம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட இவர் பயிற்றப்பட்ட இந்து சமய பாட ஆசிரியையாக பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் இருபது வருட காலமும். பின்னர் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் பதினொரு வருட காலமும் காத்திரமான கல்விப்பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

பாண்டிருப்பு மகாவித்தியாலயம். கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை என்பவற்றின் பழைய மாணவியான இவர் துறைநீலாவணை அருள்மிகு தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் அறுபத்து நான்கு ஆண்டுகள் பிரதம பூசகராகப் பணியாற்றிய அமரர் இறைபணிச் செம்மல். கிரியா திலகம் சிவத்திரு.மா.கு.கணேஷதுரைக் குருக்களின் புதல்வியாவார்.

இவ்வாசிரியையின் கல்விப் பணியைப் பாராட்டும் நிகழ்வு பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் திரு. க. தியாகராசா தலைமையில் சுகாதார வழிமுறைகளுக்கமைய இடம்பெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts