பிராந்தியம் | மருத்துவம் | 2021-10-08 18:29:12

சாய்தமருதில் பீ . சீ. ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு !

( எம். என். எம். அப்ராஸ்)

கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகாமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பீ . சீ. ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் இன்று (08)முன்னெடுக்கபட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வழிகாட்டலில் சாய்நதமருதுசுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதாரபரிசோதகர்  ஜே. நிஸ்தார் , பொது சுகாதார பரிசோதகர்களான  பைசல் முஸ்தபா , ஏ. எல் . எம். அஸ்லம்,சுகாதார உத்தியோகத்தகர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக பல நோக்கு செயலணியினர் மற்றும் பொலிஸார் ,இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து சாய்ந்தமருது  பிரதான வீதியில் பீ. சீ. ஆர்  மற்றும் அண்டிஜன்
பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டது

சுமார் 40 பேருக்கு இன்றைய தினம்  குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கொரொனா தொற்றினை கட்டுப்படுத் தும் முகாமாக சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் பொது மக்களுக்கு  விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் பீ . சீ. ஆர் ,அண்டிஜன் பரிசோதனைகள்தொடர்ச்சியாக  சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில்மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts