உள்நாடு | பொருளாதாரம் | 2021-10-01 16:40:47

பொத்துவிலில், கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு  பயிற்ச்சிப்பட்டறை

-பொத்துவில் நிருபர்- எம்.ஏ.தாஜகான்-

கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் பொத்துவில் பிரதேச செயலக  விதாதா உத்தியோகத்தர் அவர்களின் ஏற்பாட்டில்  ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் கிராமிய கைத்தொழில் முயற்சியாளர் ஒருவரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்  சம்பந்தமான  இரண்டு நாள் (2021.09.30, 10.01)  பயிற்ச்சிப்பட்டறை  நேற்றும் , இன்றும்  பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய தொழின் முயற்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர்  சந்துருவன் அநுரத்த , திட்டமிடல் பணிப்பாளர் அனீஸ், நிர்வாக உத்தியோகத்தர் சுபைர், திட்டமிடல் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் வாசித், ஆகியோர்கள் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு நாட்களும் இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராக . மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் லாகுகள பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாஸ்டர் ரெயினர் ,தொழில் வழிகாட்டல் ஆலோசகர் , நூர்தீன் முகம்மட் ஜகுபர் அவர்கள் சிறந்த முறையில் பயனாளிகளுக்குப் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

பங்குபற்றிய பயனாளிகளுக்கு அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு தொழில் முயற்சியாளராக எதிர்காலத்தில் மிளிர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts