உள்நாடு | மருத்துவம் | 2021-09-30 12:55:45

கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால்  வேலைதிட்டங்கள் முன்னெடுப்பு

-நூருல் ஹுதா உமர்-

மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் அம்பாறை, தீகவாவி, போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸார், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்குமாக இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது நாட்டை ஆட்கொண்டிருக்கும் மூன்றாம் அலையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இது மாத்திரமின்றி கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts