உள்நாடு | சமூக வாழ்வு | 2021-09-23 15:52:02

வெளிநாட்டு பட்டதாரிகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள்-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  ஸாகர காரியவசமின் கவனத்திற்கு

ஏ.பி.எம்.அஸ்ஹர்

அம்பாரை மாவட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள்  தொடர்பில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தாபா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  பாராளுமன்ற உறுப்பினர் ஸாகர காரியவசமின் அவதானத்திற்குக்கொண்டு சென்றுள்ளார்.

இவர்கள் இருவருக்குமிடையிலான சந்திப்போன்று இன்று(23) கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது பட்டதாரிகளின் இடைநிறுத்தப்பட்ட வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்துமாறும் அவர்களுக்கான நியமனத்தை உடனடியாக வழங்குமாறும் பட்டதாரிகள் சார்பில் றிஸ்லி முஸ்தபா கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான ஆவணங்களையும்  இவர்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது ச்செயலாளரிடம் கையளித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts