உள்நாடு | பொருளாதாரம் | 2021-09-23 15:45:33

செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத் திட்டம்

( எம். என். எம். அப்ராஸ்)

சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்  திட்டங்கள் 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்  முகமாக செளபாக்கிய வேலைத் திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு இஸ்லாமாபாத் கிராம சேவகர் பிரிவில்  இன்று (23)இடம்பெற்றது

இதன் போது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  முகமாக  கரவை பசுக்கள் மற்றும் சமுர்த்தி சீட்டிலுப்பில்  வெற்றி பெற்றவர்களுக்கான வீடமைப்புக்கான காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே . லியாகத்அலி, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் ,வலய உதவி முகாமையாளர்எஸ் . எல் .அசீஸ்

,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்,திட்டஉதவியாளர் ஏ.எஸ்.எம்.ஜௌபர் 

,சமூர்த்தி உத்தியோகத்தர் ஐ. எல். அர்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டு பயானாளர்களுக்கான வாழ்வாதார வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts