உள்நாடு | குற்றம் | 2021-09-20 17:47:20

​மருதமுனையில், இரும்பு முட்டுகளை திருடியவர் பொலிசாரிடம் சிக்கினார்.


கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் ​​கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெறும் போது கொங்கிரீட் வேலைகளுக்காகவும் ஏனைய இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் இரும்பு முட்டுகளை திருடி அதற்கு பல வர்ணங்கள் பூசி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கல்மு​​னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இப்பகுதிகளில் இவ்வாறு முட்டுக்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

எதிர்காலத்தில் பொதுமக்கள் இவ்வாறான ​​​​கட்டிட   அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் போது விழிப்புடன் செயல்படுவது கட்டாயமானதாகும்.

சாதாரணமாக இவ்வாறு திருடப்படும் இரும்பு முட்டுகள் 4000.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts