உள்நாடு | அரசியல் | 2021-09-20 17:10:45

மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,எம்.என்.எம்.அப்ராஸ்)

மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்த பேரழிவினால் மருதமுனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென மருதமுனை மேட்டு வட்டப்பகுதியில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் சுமார் 67 வீடுகள் பல வருட காலமாக எவருக்கும் வழங்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த வீட்டத்திட்டத்தை கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா நேற்று(19.09.2021) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வீடுகளை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தார். பாழடைந்துள்ள வீடுகளால் அருகிலுள்ள பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.எம்.முபாரிஸ், ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் பி.சர்மில் ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts