பிராந்தியம் | மருத்துவம் | 2021-09-17 19:55:13

கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் பிரதேச மக்களுக்கு நோய் எதிர்ப்பு  பானம் வழங்கி வைப்பு

(எம். என். எம். அப்ராஸ்)

கொரோனா வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் (immunity drink )பொது மக்களுக்கு இலவசமாகவழங்கி வைக்கும் நடவடிக்கை கல்முனை  பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக அதிமேதகு ஜானாதிபதி கோட்டாப ய ராஜபக்சவின் எண்ணக்கருவில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதாஜஹம்பத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரின் நெறிப்படுத்தலில்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. இ.ஸ்ரீதர் அவர்களின் ஆலோசனைக்கும், 
அறிவுருத்தல்களுக்கும் அமைவாக, கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபீலின் 
மேற்பார்வையில் கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் கல்முனை மனிதவள அமைப்பின் ஒத்துழைப்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு பானம் (immunity drink) பொதி வழங்கும் செயற்பாடு இன்று (17) இடம்பெற்றது.

கல்முனை கீரின் பீல்ட் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று  கொரோனா வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதன்போது,  கொரோனா தொற்று தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் விழிப்புணர்வுகள்   மேற்கோள்ளப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கிவைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts