![]() |
நூருல் ஹுதா உமர்
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட அனாதைகள் வலையமைப்பில் இருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் விசேட தேவையுள்ளோரும், பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து "சஹ்ருது உலருணவு" விநியோக திட்டத்தின் கீழ் 175 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இவர்களுக்கான பொதிகளை காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் வழங்கி இன்று ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் எம்.எப்.சி.டி இளைஞர் அமைப்பினர் , அக்கரைப்பற்று மெதடிஸ் தேவாலய அபிவிருத்திக்குழு இளைஞர்கள் அம்பாரை மாவட்ட அனாதைகள் வலையமைப்பு மற்றும் மகளீர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.