உள்நாடு | கல்வி | 2021-09-17 15:21:07

மருதமுனை அஸ்லம் சஜா தேசிய  கற்பித்தல் விஷேட வளவாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சும்,தேசிய கல்வி நிறுவகமும் சேர்ந்து கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து தேசிய ரீதியாக முன்னெடுத்து வரும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  ஏழுபேரில் ஒருவராக க.பொ.த உயர்தர தமிழ்ப்பாட வாளவாளராக மருதமுனை  கமு/ஷம்ஸ் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.எம் அஸ்லம் சஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய Covid- 19 இடர்கால நெருக்கடி நிலையில் க.பொ.த சாதாரண தரம்,க.பொ.த உயர்தரம் ஆகிய மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக online ஊடாக தேசிய ரீதியில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிட்டத் தக்கதாகும்.

கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 07 ஆசிரியர்களில்  அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசிரியர்கள் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று எம்.அப்துல் ரசாக், அட்டாளைச்சேனை எஸ்.ஐ.எம்.சியாட் ரபியுஸ், கல்முனை கல்வி வலயத்தில் எம்.எம்.அஸ்லம் சஜா ஆகியேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அல் - மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான எம்.எம்.அஸ்லம் சஜா முன்னால் கிழக்கு மாகாண கணிதபாட ஆசிரிய ஆலோசகரும் அல்-மனார் பாடசாலையின் பிரதி அதிபருமான மர்ஹூம்
ஏ.எல்.எம்.முஸாதிக், எம்.எஸ். உம்மு சல்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார்.

இவரது வளவாளர் செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பார்த்திபன், கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி.பிர்தௌஸ் சத்தார் அவர்களும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

ஆசிரியர் அஸ்லம் சஜா அவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக அமையவும், இன்னும் பல உயர்ச்சிகளை பெறவேண்டும் என்றும் எமது www.tmnews இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts