உள்நாடு | அரசியல் | 2021-09-16 15:20:37

பன்முக ஆளுமை மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்

​எம்.எச்.எம்.அஷ்ரப் பற்றிய அறிமுகப் பார்வை 

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக ​திகழ்ந்த​ அஷ்ரப் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். அஷ்ரப் அவர்களின் தந்தையின் பெயர் முஹம்மது ஹுசைன் , தாயாரின் பெயர் மதீனா உம்மா​.​ அவரின் தந்தை கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவர். அதேபோல்​​ தாயார் சம்மாந்துறையை சேர்ந்தவர் . கல்முனை அல் - அஸ்ஹர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் பின் உயர்நிலை கல்வியை கல்முனை பற்றிமா​,​ உவெஸ்லி கல்லூரியிலும் கற்றார் . பின்னர் தனது ​​பட்டப் படிப்பை இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று 1975 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பட்டம் பெற்றார் . ஒரு தலைவருக்குரிய ஆளுமை அஷ்ரப் அவர்களின் இளமைப் பருவத்தில் காணப்பட்டது.

தலைமைத்துவ ஆளுமை , ஆன்மீகம் , இலக்கியம் , சட்டம் என பல்துறை ஆளுமை மிக்க அவர் தனது இளமைக் காலத்தில் இருந்தே தன்னை அர்ப்பணித்தார் . பாடசாலைகளில் கவிதை எழுதுதல்,​ ​மேடைப் பேச்சு போட்டியில் பங்கேற்றல் போன்ற பல நிகழ்வுகளில் பங்குபற்றி தன்னை அடையாளப் படுத்தி பல சாதனைகளை படைக்கக் கூடியவராக காணப்பட்டார் . அஷ்ரப் அவர்கள் சிறு வயதிலேயே துடிப்புள்ள ஆளுமை . சிறந்த பேச்சாளர் . வாதத் திறமை மிக்கவர் . ஒருமுறை பாடசாலையில் மாணவன் ஒருவரின் இருக்கையில் ஊசி குத்தி வைத்ததாகவும் அது அந்த மாணவனை பதம் பார்த்து விட்டதாகவும் குறித்த மாணவன் ஆசிரியரிடம் முறையிட்டார் . ஆசிரியர் அஷ்ரப்பை அழைத்து கைய நீட்ட சொன்னதும் அஷ்ரப் ஆசிரியரை நோக்கி நான் இவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றார் . ஆசிரியரும் அனுமதி கொடுத்தார் . அஷ்ரப் அந்த மாணவனை நோக்கி நான் ஊசி குத்தியதை நீ கண் டாயா? என வினவ மாணவன் ஆம் என்றார். அப் போது அஷ்ரஃப் கண்டால் நீ ஏன் அதில் இருக்க வேண்டும் என்றார் . அஷ்ரபின் வாதத் திறமை ஆசிரியரை ஆச்சரியப்படுத்தி சிரிக்க வைத்தது. எனவே இவ்வாறு தனது இளமைக் காலத்தில் இருந்தே பல்வேறு திறமை மிக்கவராக காணப்பட் டார் . அஷ்ரப் எனும் தலைவர் சிறு பராயத்தில் இருந்தே வளர்ந்து வந்த தலைவர் என்பதை நாம் விளங்க முடியும் .

அஷ்ரபின் பன்முக ஆளுமை 

மறைந்த மாமனிதர் அஷ்ரப் ஒரு தனி ஆளுமை அல்ல. பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திய பன்மு​​க​​ ​ஆளுமையாகும். அஷ்ரப் அவர்களின் பன்மு​​க ஆளுமையை அரசியல் , இலக்கியம் சட்டம் ​போன்ற​ ​துறைகளின் ஊடாக ஆராய முடியும் . அந்த வகையில் அரசியல் துறையில் அஷ்ரபின் ஆளுமை மிக விரிந்ததாகும். அவரின் வாழ்வில் அரசியல் துறைக்கான அர்ப்பணிப்பு நீண்டதாகும். ஒரு சமூகத்தின் அரசியல் தலைவர் என்பதற்கு அவரின் அரசியல் ரீதியான ஆளுமை கள் குறிப்பிடத்தக்கவையாகும். 

1983 ஜூலைக் கலவரத்தை தொடர்ந்து இனப்பிரச்சினைக்கான அதிகார பகிர்வு விடயத்தில் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசு ஒரு பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. அப் பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இயங்கிய ' முஸ்லிம் கவுன்சில் ' என்ற அமைப்பின் பிரதிச்செயலாளர் பதவியை வகித்த அஷ்ரப் அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இது அவரின் அரசியல் ஆளுமைக்கான மிகப்பெரிய சான்றாகும். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலையை அஷ்ரப் அன்று ஆழமாக புரிந்துள்ளார் . தனித்துவமாக உரிமைகளை பேணி வாழக்கூடிய வகையில் அதிகாரங்கள் அப்போது காணப்படவில்லை என்பதை உணர்ந்த அஷ்ரப் முஸ்லிம்களின் உரிமைகளை யும் அரசியல் அதிகாரங்களையும் அடைந்து கொள்வதற்கு தனித்துவமான அரசியல் பயணம் அவசியம் என்பதை சமூகத்திற்கு வெளிப்படுத்தி ​ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி சிதறிக்கிடந்த சமூகத்தை ஒன்றுபடுத்தி தனித்து​​வ​ அரசியல் பாதையில் பயணிக்க வைத்தமை அஷ்ரபின் ​​வரலாற்று சாதனையாகும். 

முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிப் பாதைக்கு அஷ் ரப் மேற்கொண்ட பணிகள் அதன் மூலம் வெற்றியீட்டிய சமூகம் என்பன அஷ்ரபின் அரசியல் ஆளுமைக்கான சான்றுகளே. எனவே இவ்வாறு அவரின் ஆளுமையை கூறமுடியும். அஷ்ரப் அவர்களின் ஆளுமைகளுள் மற்றுமொரு பகுதியே இலக்கியமாகும். அவர் ஓர் அரசியல்வாதி என்பதையும் தாண்டி அழகிய இலக்கியவாதி. தமிழ் இலக்கிய வல்லமை அவரின் சிறுவயதில் இருந்து வந்த விடயமாகும் என்பது அவரின் வரலாற்றை ஆராயும் போது புலப்படுகின்றது . 10 வயதிலிருந்தே கவிதை எழுதக்கூடியவராக காணப்பட்டார்​.​ ஒரு தேவை​,​ நெருக்கடி தோன்றும் பட்சத்தில் அவருக்குள்ளிருந்தே கவிதை ஊற்றெடுக்கும். அவர் எழுதிய கவிதைகளுள் 1962 இல் தேசிய முரசில் ​'​தாய்​'​ பற்றிய கவிதை பிரசுரமானது. அர சியல் பயணங்களை கூட கவிதை வடிவத்தில் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . ‘ நான் எனும் நீ ' என்ற அவரது பிரபல்யமான கவிதை நூலூக்கு இந்தியாவின் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அணிந்துரை வழங்கியமை அவரின் இலக்கியத்திற்கு மிகப்பெரிய சான்ற கும் .  அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற தேசிய மீலாது விழாப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்னிந்திய புகழ்பெற்ற கவிஞர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு ' கவிஞர் திலகம் ' என்ற பட்டத்தை சூட்டினார் . எனவே இவ்வாறு இலக்கியத்திற்கு வல்லமை பெற்றவரே எம்.எச் . எம் . அஷ்ரப் ஆவார் . 

​​அஷ்ரஃப் அவர்களின் தொழில் வாண்மையாக காணப்படுவது சட்டம் ஆகும். அவர் ஒரு சட்டத்தரணி ஆவார். சட்டத்துறையில் அஷ்ரப் அவர்களின் ஆளுமை கம்பீரமானதாகும். சட்டத்தரணியாக வேண்டும் என்ற நீண்ட கால இலக்கைக் கொண்ட அஷ்ரப் தமது கற்றல் நடவடிக்கைகளில் அதற்கு ஏற்ப தன்னை தயார் படுத்தி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 1972 இல் சட்டத்தரணியாக வெளிவந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தமது அரசியல் இராஜதந்திரத்தாலும் புலமையாலும் அதனை தடுத்து நிறுத்தி பிரேமதாசவை பாதுகாத்த ஆளுமை அஷ் ரப் ஆவார். இவ்வாறு தனித்துவமான அரசியல்​,​ இலக்கியம்​, ​சட்டம் என்ற பல்துறை ஆளுமை மிக்கவரே தலைவர் அஷ்ரப் ஆவார்.


அஷ்ரஃப் அவர்களின் மறைவும் இன்றைய முஸ்லிம்களின் அரசியல் பாதையும்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலையை அன்றைய காலத்தில் தெளிவாக புரிந்திருந்தவர் அஷ்ரப். அஷ்ரப் அவர்களின் வருகை கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது. 1980 களில் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்த காலத்தில் கிழக்கு முஸ்லிம்களின் சமூக​,​ பொருளாதார மற்றும் வாழ்வியலில் அச்ச நிலை ஏற்பட்டது . அவர்களின் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முஸ்லிம் தலைமையின் வெற்றிடம் மக்களிடம் உணரப்பட்டது . அந்த நிலையில் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தவும்​ ​உரிமைகளைப் வென்று கொள்ளவும் முன்வந்த தலைவர் அஷ்ரப் ஆவார் . சிதரிக்கிடந்த சமூகத்தை ஒன்றிணைந்து புதிய அரசியல் பாதையை உருவாக்கி அதில் பயணித்தார் . முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியின் மூலம் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் பாதுகாக் கப்பட்டது. இன்றைய காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் பலவீனமான முறையில் செல்லக்கூடியதை அவதானிக்க முடிகின்றது. அஷ்ரப் அவர்கள் உருவாக்கி பயணித்த அரசியல் பாதை அவரின் மறைவுக்குப் பின் சிதறடிக்கப்பட்ட நிலையில் செல்கின்றது. முஸ்லிம்களின் உரிமைகளை வென்று கொள்வதற்கு தக்கவகையில் தனித்துவமான கட்சி காணப்படுகின்றதா ? என்பது இன்றைய காலத் தில் கேள்விக்குள்ளாக்கும் விடயமாக காணப்படுகின்றது . தலைமைத்துவ முரண்பாடு , கட்சி,
பிளவு , அரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்களில் பலவீனமான பார்வை , சமூகத்தின் பிளவுபட்ட அரசியல் போக்கு உள்ளிட்ட பல காரணிகளால் இன்றைய முஸ்லிம்களின் அரசியல் பாதை பலவீனத்தை சந்தித்துள்ளது . எனவே தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்தின் நிரப்ப முடியாத இடைவெளியாகும். அவர் விட்டுச் சென்ற இடைவெளி பூரணப்படுத்தாமல் உள்ளது என்பது யதார்த்த பூரணமான உண்மையாகும் .

இன்றைய காலத்தில் பயணிக்கப்பட வேண்டிய அரசியல் பாதை

இன்றைய காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் தளம் உறுதியாக காணப்பட வேண்டும் . அதன் பாதை நவீனத்துவம் அடைய வேண்டும் . மக்களின் அபிப்பிராயம் வென்ற அரசியல் பாதை இன்றைய காலத்திற்கு மிக அவசியமாக உள்ளது. அந்த வகையில் இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய பலம் மிக்க சிறந்த அரசியல் கட்டமைப்பை உருவாக்கி பயணிக்கக் கூடிய அரசியல் பாதைக்கு சில சீர்திருத்தங்கள் அவசியமாகும் . அவற்றை பின்வருமாறு நோக்க முடியும் . ஒன்றுபட்ட அரசியல் தலைவர்கள் , சமகாலத்தில் பொருந்தக்கூடிய கொள்கைகள் , இன நல்லிணக்க வேலைத் திட்டங்கள் , சமூக நலன்கள் முதன்மைப்படுத்தப்படல் இளைஞர்களை வலுவூட்டல் , மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்தல் , பெரும்பான்மை சமூகத்தின் அபிப்பிராயத்தை பெறக்கூடிய செயற்பாடுகள் , சர்வதேச தொடர்புகள் முதலான விடயங்களை உள்ளடக்கிக் கொண்டு பயணிக்கக்கூடிய அரசியல் பாதை இன்றைய காலத்திற்கு மிக அவசியமாகும். இவை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் சிறந்த அரசியல் கட்டமைப்பை உருவாக்கி முன் கொண்டு செல்ல வேண்டியது இன்றைய காலததின் தேவையாக உள்ளது.  அஷ்ரப் அவர்களின்  21 வது நினைவு பகிர்வாக​,​ இது இன்றைய காலத்திற்கு அவசியமான பகுதிகள் என நம்புகின்றேன். அரசியல் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.சமூகத்தின் இருப்பு , உரிமை போன்ற எல்லா விடயங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆயுதமாக உள்ளது.அந்த வகையில் அஷ்ரப் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் மறக்க முடியாததும் தவிர்க்க முடியாததுமான மனிதராவார்.அவர் உருவாக்கிய நோக்கம்​,​ கொண்டு வந்த பாதை  இன்றைய அரசியலில் மிகக் குறைவான நிலையில் காணப்பட்டாலும் வலுமிக்க அரசியல் கட்டமைப்பை சமூகம் வேண்டி நிற்கின்றது.​ ​இதனை அனைவரும் கருத்தில் கொண்டு அஷ் ரப் விட்ட இடைவெளியை தொடர்ந்து பயணிக்க முயற்சிப்போம் .


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts