பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-09-14 00:04:44

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு 'சுவ தாரணி' ஆயுள்வேத மருந்து வழங்கிவைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கொரோனா தொற்று நோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் ஆயுள்வேத வைத்தியசாலைகள் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் 'சுவ தாரணி' ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (13.09.2021) அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பாளரும், சிறுவர் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் சமூக ஸ்தாபனத்தின் தலைவருமான பி(B). சர்மில் ஜஹான் தலைமையில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாமில்  நடைபெற்றது.

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒரு தொகுதி மருந்துகளை விசேட அதிரடிப்படை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.பி.பி.எம்.டயஸிடம் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வைத்தியசாலையின் டாக்டர். ஏ.சி.டில்சாத், மருதமுனை ஆயள்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான டாக்டர் எம்.என்.எம்.முஸ்தாக், டாக்டர் திருமதி எஸ்.எச்.எப்.றிஸ்வானா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆயள்வேத பானத்தை அருந்தும் முறைகள் பற்றியும் வைத்திய அதிகாரிகளால் விவேட அதிரடிப்படையினருக்கு தெளிவுபடுத்தப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts