உள்நாடு | பொருளாதாரம் | 2021-09-12 09:47:10

தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் காரைதீவில் ஆரம்பம்.

-நூருல் ஹுதா உமர் -

"சமுர்த்தி அருணலு " ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராவும் பத்து லட்சம் வீட்டுத்தோட்டமனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாடாளாவியரீதியில் இடம் பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கரடித்தோட்டம் சமூர்த்தி வங்கி வலயப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி உதவிபெறும் மற்றும் சமூர்த்தி உதவி பெறத்தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட விதைப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு காரைதீவு சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் சத்தியப்பிரியன் தலைமையில் கரடித்தோட்ட கிராமசேவகர் பிரிவில் இடம் பெற்றது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டார். மேலும் தலைமை பீட முகாமையாளர் .ஆ.அச்சு முகமட், வலய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts