பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-09-12 08:37:21

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் "கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் பிரதேச செயலாளர் அல்-ஹாபிழ் எம்.எஸ்.எம். றஷ்ஷான்

- நவாஸ் ஸாஜித் -

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் "கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் 07 பேர் மட்டுமே தொற்றாளர்காக இனம் காணப்பட்டுள்ளனர். "இரண்டாம் கட்ட Sinopharm தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் அல்-ஹாபிழ் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) தெரிவித்தார்.

எமது பிராந்தியத்தில் பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பான விஷேட மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) அவர்களின் தலைமையில் 2021.09.09 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10.00 மணியளவில் பிரதேச செயலாளர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், உதவி  பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜௌஸ், இறக்காமம்  இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெப்டன். அமில பெரேரா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை.ஜௌபர், சிவில் பாதுகாப்பு படை பொறுப்பதிகாரி ஜே. றஹீம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இறக்காமம் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஏ.கே. அப்துல் ரஊப், வரிப்பத்தான் சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க். அ. அப்துல் ஹாமிது (மதனி), ஜாமிஉத் தையார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ. எஹியால்,  உள்ளிட்ட கொரோனா செயலணிக் குழு  அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல். ஜமீல், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எச்.பி.டி. ஹெசேரத் பண்டார, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சலீம் (மௌலவி) உற்பட பிரதேச செயலக கொரோனா பாதுகாப்புச் செயலணிக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பத்தல், பிரதேச மட்டத்தில்  தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விழிப்புணர்வுகளை நடாத்தல், தூர பிரதேச இடங்களுக்கு  நடமாடும் தடுப்பூசி ஏற்றும் முகாம்களை நடத்தல், பிறழ்பட்ட கொவிட் வைரசஸ் பரவலைத் தடுக்க எழுமாறான PCR பரிசோதனை, Rapid Antigen Test  என்பவற்றை நாடத்துதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.  மேற்படி விடயங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கான  உக்திகளும் வேலைத்திட்டங்களும் ஆராயப்பட்டு, நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts