பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-09-08 14:00:25

வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான கல்முனையன்ஸ் போரத்தின் நான்காம் கட்ட நிவாரண நிதி விநியோகம்*

(நிப்றாஸ் மன்சூர், ஹூதா உமர் )

கொவிட் தீவிர பரவல் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நாட்டின் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கல்முனையன்ஸ் போரம் உதவிக்கரம் நீட்டிக்கொண்டு வருகிறது. 

அந்த வரிசையில் தற்பொழுது நாட்டில் அமுலிலிருக்கும் லொக்டவுண் காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கான நான்காம் கட்டமாக நிவாரண விநியோகம் நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.  

கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிக்குடும்பங்களுக்கு தலா ரூபா 2,000/= படி நிவாரண நிதி கடந்த இரு நாட்களில் (06,07)  வழங்கிவைக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் கல்முனையன்ஸ் போரமானது இதுவரையிலும் நான்கு கட்டங்களில் சுமார் 2.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரண விநியோகத்தினை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts