பிராந்தியம் | மருத்துவம் | 2021-08-31 12:40:21

கல்முனை தெற்கில், இரண்டாவது டோஸ்  தடுப்பூசியை பெற பொதுமக்கள் ஆர்வத்துடன்  வருகை

(எம்.என்.எம்.அப்றாஸ், ஏ.எல்.எம்.ஷpனாஸ்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாகவும் இன்று (31.08.2021) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வழிகாட்டலில் வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், அல்- பஹ்ரியா  தேசிய பாடசாலை, அல்-அஸ்ஹர் வித்தியாலயம், மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலை, அல்- மதீனா வித்தியாலயம் பெரியநீலாவனை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் ஆகிய 08 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வியாழக் கிழமை வரைக்கும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts