பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-08-21 14:21:24

​​ஊரடங்குச்சட்டம்​​ அமுல்படுத்தப்பட்டதை அடுத்து உறங்கிப் போன கல்முனை நகரம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நோற்று 20.08.2021 இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டள்ளது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதான நகரம் இன்றைய​ ​தினம் இவ்வாறு உறங்கிப்போய் கிடந்தன.

இதேவேளை கல்முனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் வர்தக நிலையங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய் கிடந்தது.

பொலிசார் பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்தியவசிய தேவைகளுக்கான அனுமதி பத்திரத்தோடு பயணித்தவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts