பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-08-19 15:28:33

கல்முனையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங் களுக்கு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கி வைப்பு

(எம். என். எம். அப்ராஸ்)

இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை ( 200000 ) மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் "சமூர்த்தி அருணலு" (வாழ்வாதார அபிவிருத்தி)தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது

இதனடிப்படயில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ளகல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய பிரிவில் தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங் களுக்கு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் ஆரம்ப  நிகல்வு கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இன்று (19)இஸ்லாமாபாத் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே . லியாக்கத் அலி ,கல்முனை பிரதேச  செயலக சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்டமுகாமையாளர்  ஏ. ஆர். எம். சாலிஹ் ,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, மாவட்ட சமூர்த்தி  கணக்காய்வு உத்தியோகத்தர் என். டினோசன் ,  வலய உதவி முகாமையாளர். எஸ். எல். அசிஸ் கருத்திட்ட உதவியாளர்  எ. எஸ். எம்.ஜவ்பர்  சமூர்த்தி உத்தி யோகத்தர் ஐ. எல்.அர்சதின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங் கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts