உள்நாடு | அரசியல் | 2021-08-16 13:44:18

அமைச்சரவையில் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் எரிசக்தி அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லெகுகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts