விளையாட்டு | விளையாட்டு | 2021-08-08 22:57:15

மறைந்த முன்னாள் தேசிய கரப்பந்தாட்ட வீரர் கார்த்திகேசு கருணாரத்னத்திற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் இரங்கல் . 

-நூருள் ஹுதா உமர்-

இலங்கையணியின் முன்னாள் கரப்பந்தாட்ட வீரர் அண்மையில் காலமான கார்த்திகேசு கருணாரத்னம் அவர்களுக்கு இரங்கல் வெளியிட்டு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த சம்மேளத்தின் சார்பில் சம்மேளத் தலைவர் காஞ்சன ஜயரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

எனது நீண்ட கால நண்பரும், திறமையான சக வீரருமான மறைந்த கார்த்திகேசு கருணாரத்னம் அவர்கள் ஆண், பெண் கரப்பந்தாட்ட மேம்பாட்டுக்காக உழைத்ததுடன் திறமையான வீரர்களை வெளிக்கொணர்ந்து சிறந்த முறையில் கரப்பந்தாட்டத்தை ஊக்கப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒருவராவார். அவர் வடமாகாணத்தின் வீரராக மாத்திரமின்றி சிறந்த முறையில் பிரகாசித்த தேசிய வீரராகவும் திகழ்ந்தார். 

தனது காலத்தில் கிராமத்தில் வாழ்ந்த நிறைய திறமையான கரப்பந்தாட்ட வீரர்களை அடையாளம் காட்டி அவர்களின் திறமைக்கு வழிசமைத்து கொடுத்த ஒருவராக இருந்துள்ளார். அவர் மரணித்தாலும் அவர் செய்த சேவைகளினுடாக எல்லோரது மனதிலும் வாழ்வார்.  அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts