உள்நாடு | குற்றம் | 2021-07-28 19:26:32

​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

சாய்ந்தமருது உஸ்மான் வீதியை சேர்ந்த19 வயதுடைய இளைஞன் இன்று (28) மாலை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவரு​​வதாவது, கல்முனை பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்சுபமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1பஅ 360அட நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இளைஞனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இளைஞர் கல்முனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரும் மருதமுனை விசேட அதிரடிப்படையினரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts