பிராந்தியம் | கல்வி | 2021-07-27 09:53:07

சிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூரின் வழிகாட்டலில் ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில் ஸ்கை தமிழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் அனுராதபுரம், புத்தளம், குருநாகல், கண்டி, கேகாலை, களுத்துறை, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறவை, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா, மாத்தளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை, பதுளை, நுவரெலியா உள்ளிட்ட அத்தனை மாவட்டங்களிலிருந்தும் 300 க்கும் மேற்பட்ட கட்டுரைப் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்

இக்கடுமையான போட்டியில் மிகவும் சிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு கட்டுரைப் போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் அலுவலகத்தில் கல்முனை மாநகரசபை பிரதிமேயரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts