உள்நாடு | சமூக வாழ்வு | 2021-07-25 21:31:34

மகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்

நூருல் ஹுதா உமர்

இலங்கையில் ஆளுமை மிக்கவர்களின் ஒருவராக இருந்த மகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் அவர்கள் அமரத்துவமடைந்த செய்தி மிகவும் கவலையாக என்னுள் உருவெடுத்துள்ளது. கடந்த 20 வருடங்களாக என்னுடன் நட்பு பாராட்டி சிறந்தமுறையில் எனக்காக பல்வேறு ஆலோசனைகளையும், சந்தர்ப்பங்களையும் வழங்கிய அன்னாரின் இழப்பு கவலையாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த அனுதாப அறிக்கையில் மேலும்  

தமிழை மிகவும் நேசித்து இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டிருந்த அவர் தனது பொருளாதாரம், நேரம், செல்வாக்கு என பல்வேறு அம்சங்களை இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக செலவளித்துள்ளார். 32 நிறுவனங்களின் அதிபராக இருந்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தொழிவாய்ப்புக்களை வழங்கியது மட்டுமின்றி பல திறமையானவர்களையும் உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

எமது நாட்டின் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து அதற்கு ஏற்றாற்போல அதிகார வர்க்கத்துடன் தன்னுடைய ஊடகப்பலத்தை கொண்டு முட்டிமோதிய தைரியமிக்க ஒருவராக இவரை கண்டிருக்கிறோம். இவரை பற்றிய முழுமையான தகவல்களுடன் விரைவில் சந்திக்கும் வரை அன்னாரின் இழப்பினால் துயருற்ற சகலருக்கும் என்னுடைய அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts